Princiya Dixci / 2017 ஜனவரி 26 , மு.ப. 02:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
வி.நிரோஷினி
“ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகைக்காக ஐரோப்பிய ஒன்றியத்தால் விதிக்கப்பட்டுள்ள 58 நிபந்தனைகளில் ஒரு நிபந்தனை நிறைவேறப்போகிறது” என, முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
“தற்போதுள்ள பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை நீக்கி, சர்வதேச நியமங்களுக்கு ஏற்ப புதிய சட்டம் கொண்டுவரப்படும் என, சர்வதேசத்துக்கு அரசாங்கம் உறுதியளித்துவிட்டது” என்று, அவர் மேலும் தெரிவித்தார்.
புஞ்சிபொரளையிலுள்ள என்.எம்.பெரேரா நிலையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
“எமது நாட்டில், ஒருகாலத்திலும் இவ்வாறானதோர் அரசாங்கம் இருந்ததில்லை. இந்நாட்டில் வௌிநாட்டுப் பிரதானிகளின் தலையீடு இருப்பதால், அது நாட்டின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறக்கூடிய வாய்ப்பு உள்ளது.
“ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை மீண்டும் பெற்றுக்கொள்ளும்முகமாக, எந்தவொரு நிபந்தனைகளுக்கும் இணங்கவில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது. இது முற்றிலும் உண்மைக்கு புறம்பான கருத்தாகும். ஐரோப்பிய ஒன்றியத்தால் 58 நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. அதில் ஒன்று, தற்போதுள்ள பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை நீக்கி, சர்வதேச நியமங்களுக்கு ஏற்ப புதிய சட்டத்தைக் கொண்டுவர வேண்டும் என்பதாகும்.
“இலங்கைக்கு சர்வதேசத்தின் உதவிகள் அவசியம் தான். ஆனால், அவர்களின் தாளத்துக்கு ஏற்ப ஆடினால், அது நாட்டின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக அமையும்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .