2026 மார்ச் 08, ஞாயிற்றுக்கிழமை

காணாமல் போனோர் விவகாரம்: பொறிமுறைக்கு ஆராய்வு

Princiya Dixci   / 2017 ஜனவரி 26 , மு.ப. 03:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜே.ஏ.ஜோர்ஜ்

காணாமல் போனோருக்குத் தீர்வை வழங்கும் பொறிமுறைக் குறித்து அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக, சுகாதார அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான ராஜித சேனாரட்ன, தெரிவித்தார்.

'காணாமல் ஆக்கப்பட்டதாகக் கூறப்படும் நபர்களை எங்கேபோய் தேடுவது. இந்தப் பிரச்சினையை ஓரிரு நாட்களில் தீர்த்து விட முடியாது' என்றும் அவர் குறிப்பிட்டார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு, அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற போது, அவர் இதனைக் கூறினார்.

அவர் தொடர்ந்து கூறுகையில், 'காணாமல் போனவர்களை தேடிப் பார்ப்பதுதான அவர்களை கண்டுப்பிடிப்பதற்கு உள்ள ஒரே வழி. ஆனால், புதிதாக தேடிப் பார்ப்பதற்கு ஒன்றுமில்லை. காணாமல் போனோர ; தொடர்பிலான முறைப்பாடுகள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

1971, 1988ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட கலவரங்களின் போது, காணாமல் போனவர்களுக்கான மரண சான்றிதழ்கள் கூட இன்னும் கிடைக்கவில்லை.

காணாமல் போனோரின் மரணச் சான்றிதழையாவதுபெற்றுக்கொடுக்குமாறு காணாமல் போனோரின் உறவினர்கள் கோருகின்றனர். அவ்வாறு மரணச் சான்றிதழ் கொடுப்பதற்கான முறையொன்று இலங்கையில் இல்லை.

1976ஆம் ஆண்டிலிருந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு எவ்வாறானத் தீர்வைப் பெற்றுடிகாடுப்பது என்ற பொறிமுறை தொடர்பில் நாம் ஆராய்ந்து வருகின்றோம். இந்தப் பிரச்சினையை இரண்டொரு நாட்களில் முடிவுக்கு கொண்டுவர முடியாது.

1988ஆம் ஆண்டில் இறந்ததாகக் கூறப்பட்ட ஒருவர், 26 வருடங்களின் பின்னர், மீண்டும் வீடுக்கு திரும்பி வந்த சம்பவம் அண்மையில் இடம்பெற்றது. இந்நிலையில், அவரை காணவில்லை என நினைத்து மரணச்சான்றிதழ் கொடுத்திருந்தால் என்னவாகியிருக்கும். இது தான் இங்கு உள்ள பிரச்சினை.

மரண சான்றிதல் கொடுத்துவிட்டு, மீண்டும் பிறப்புச் சான்றிதல் கொடுக்க முடியாதல்லவா? எனவே காணாமல் போனவர்கள் அனைவரும் இறந்துவிட்டதாக தீர்மானித்து மரணச்சான்றிதழ் கொடுக்க முடியாது' என ராஜித்த சேனாரத்ன மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .