2026 மார்ச் 08, ஞாயிற்றுக்கிழமை

காணி உரித்து வழங்க அமைச்சரவை அங்கிகாரம்

Princiya Dixci   / 2017 ஜனவரி 26 , மு.ப. 03:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜே.ஏ.ஜோர்ஜ. 

புதிய கிராமங்கள் எண்ணக்கருவின் கீழ் அமுல்படுத்தப்பட்டுள்ள ஹுட்வில் வீடமைப்பு கருத்திட்டத்தின் பயனாளிகளுக்கு, காணி உரித்தையும், உகந்த வீடுகளையும் பெற்றக் கொடுக்க, அமைச்சரவை அங்கிகாரம் அளித்துள்ளதாக, ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க, தெரிவித்தார். 

அமைச்சரவை முடிவுகளை
வெளியிடும் ஊடகவியலாளர் சந்திப்பு, அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற போது, அவர் இதனைக் கூறினார். 

“தோட்டத் தொழிலாளர்களுக்கு உயர் வாழ்க்கைத் தரத்தை ஏற்படுத்தி கொடுக்கும் நோக்கில், புதிய கிராமங்களை ஏற்படுத்தும் எண்ணக்கருவின் கீழ், நுவரெலியா மாவட்டத்தின் ஹுட்வில் வீடமைப்பு கருத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.  

குறித்த கருத்திட்டத்தின் கீழ், 71 பயனாளிகளுக்கு காணி உறுதிகளை வழங்குவது தொடர்பில் அமைச்சரவை அங்கிகாரம் அளித்துள்ளது” என்றார். 

மேலும், மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரத்தால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கே அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியதாகவும் அவர் குறிப்பிட்டார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .