George / 2017 ஜனவரி 26 , மு.ப. 04:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஜே.ஏ.ஜோர்ஜ்
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனின் மருமகனான அர்ஜுன அலோசியஸுக்கு, அரசாங்கத்தின் முக்கியஸ்தர் ஒருவருடன் நேரடித் தொடர்புள்ளது என்று சுகாதார அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான ராஜித சேனாரட்ன, தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை வெளியிடும் ஊடகவியலாளர் சந்திப்பு, அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற போது, ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இதனைக் கூறினார்.
அவர், தொடர்ந்து கூறுகையில், நல்லாட்சி அரசாங்கம், கடந்த காலத்தில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தியுள்ளது. மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தைப் போல நாம் எதனையும் மறைக்கவில்லை” என்றார்.
“அர்ஜுன அலோசியஸை முடிந்தால் கைது செய்து காட்டுமாறு, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, தெரிவித்துள்ளாரே?” என ஊடகவியலாளர் ஒருவர் கேட்க, அதற்கு பதிலளித்த அமைச்சர் ராஜித, “எவரையும் பாதுகாக்க வேண்டிய தேவை எமக்கு இல்லை. தன்னுடன் நீண்டகாலமாக இணைபிரியாமல் இருந்துவந்த அர்ஜுன அலோசியஸ், பிரிந்து சென்று விட்டாரே என்ற சோகத்தில் நாமல் ராஜபக்ஷ உள்ளார்.
காதலர்கள் போல இருந்த இருவரும் தற்போது பிரிந்து விட்டார்கள். தனது காதலி வேறு ஒரு நபருடன் தொடர்பில் இருப்பதை எந்தக் காதலன் தான் விரும்புவான்? அந்தக் கோபத்தில் தான் அர்ஜுன அலோசியஸ் மீது நாமல் தற்போது குற்றஞ்சாட்டுகிறார்” என்றார்.
மேலும், றகர் வீரர் வசீம் தாஜுதீனும் இவ்வாறான காதல் பிரச்சினையால் தானே கொல்லப்பட்டார் என்று நகைச்சுவையாக ராஜித்த தெரிவித்தார்.
இதன்போது, குறுக்கிட்ட ஊடகவியலாளர்கள், “அந்தக் காதலி (அர்ஜுன அலோசியஸ்) எந்த நபருடன் தற்போது தொடர்பில் உள்ளார்?” என்று கேட்க, “ஏன், உங்களுக்கே நன்றாகத் தெரியும் தானே ” என சிரித்துக்கொண்டே பதிலளித்த ராஜித்தவிடம், “அவர் யார் என்றுக் கூற முடியுமா?” என ஊடகவியலாளர்கள் மீண்டும் மீண்டும் கேட்க, “அரசாங்கத்தில் உள்ள ஒருவர் தான்” என்று மட்டும் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .