George / 2017 ஜனவரி 26 , மு.ப. 10:13 - 0 - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன், நடராசா கிருஸ்ணகுமார், எஸ்.என்.நிபோஜன்
கிளிநொச்சி மத்திய கல்லூரி மாணவர்கள், இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாணவி ஒருவருக்கு பாடசாலைக்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டு, மாணவியின் புகைப்படத்துடன் ஊடகங்களில் செய்தி வெளியாகியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இவ்வார்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
பாடசாலையின் ஆரம்பப் பிரிவில் கல்வி கற்ற மாணவி ஒருவருக்கு, பாடசாலையின் கல்லூரியில் இணைவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. தேசிய பாடசாலையாக இப்பாடசாலை உள்ளமையால், இப்பாடசாலைக்கு உள்வாங்குவதற்கான தகமைகள் இல்லை எனவும் இதனால், மாணவியை உள்வாங்க முடியவில்லை எனவும் பாடசாலையால் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், பாடசாலை அனுமதி மறுத்தமை தொடர்பில் சமூக வலைத்தளங்கள் மற்றும் பத்திரிகைகளில் தவறாக செய்தி வெளியிடப்பட்டுள்ளதாக பாடசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்தே பாடசாலை மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .