Menaka Mookandi / 2017 ஜனவரி 27 , மு.ப. 06:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.நிதர்சன்
'மீள்குடியேற்ற அமைச்சை அரசு என்னிடம் தருவதற்கு முன்வந்த போதும், தமிழரசுக்கட்சியே அதனை தடுத்தது' என, கைத்தொழில் வர்த்தக துறை அமைச்சர் ரிஷாட் பதியுதீன், இன்று தெரிவித்தார்.
'இடம்பெயர்ந்த மக்களுக்காக நான் பல விடயங்களை கடினப்பட்டு செய்திருந்தேன். இன்னும் பல விடயங்களை செய்ய வேண்டும் என, முயற்சிகளை மேற்கொண்டிருந்தேன். மீள்குடியேற்ற அமைச்சு எனக்கு கிடைத்திருந்தால், அவ்வாறு செயற்பட்டிருக்க முடியும். இருந்த போதும், தமிழரசுக் கட்சியே அரசிடம் தெரிவித்து, அவ்வமைச்சு எனக்கு கிடைப்பதைத் தடுத்தது' எனவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை பொருத்து வீடுகள் தொடர்பில் கேட்டபோது 'பொருத்து வீடுகள் இச்சூழலுக்கு பொருத்தமில்லை' எனவும் அவர் தெரிவித்தார்.
பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் எதிர்ப்புகள் தெரிவிக்கப்படும் அதேவேளை, மீள்குடியேற்ற அமைச்சினால் பொருத்து வீட்டுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .