2026 பெப்ரவரி 19, வியாழக்கிழமை

‘ரூ. 66 மில்லியனை ஏப்பம் விட்ட அர்ஜுன’

Princiya Dixci   / 2017 பெப்ரவரி 06 , மு.ப. 01:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

திலங்க கனகரத்ன

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராகப் பதவி வகித்த 21 மாதங்களில், மத்திய வங்கியின் 66 மில்லியன் ரூபாயை, முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன், தனிப்பட்ட தேவைகளுக்காகப் பயன்படுத்தியுள்ளார் என, ஊழலுக்கெதிரான குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளரான வசந்த சமரசிங்க குற்றஞ்சாட்டியுள்ளார். 

163 சந்தர்ப்பங்களில் இவ்வாறு பணத்தை அவர் மோசடி செய்ததாகக் குற்றஞ்சாட்டிய வசந்த, மத்திய வங்கியின் உள்ளக கணக்காய்வு அறிக்கையின் மூலம் இது வெளிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.  

“2016ஆம் ஆண்டு ஓகஸ்ட் 1ஆம் திகதி வரையான மகேந்திரனின் வெளிநாட்டுச் சுற்றுலாக்கள் தொடர்பாகவும் அவரது கடனட்டைக் கட்டண விவரங்கள் தொடர்பாகவும், இந்த அறிக்கை பட்டியலிடுகிறது. 163 சந்தர்ப்பங்களில் அவர், வலிதான கட்டணப் பட்டியலைச் சமர்ப்பிக்கவோ அல்லது சொகுசுப் பொருட்கள் மீது செலவளித்தோ உள்ளார். ஐரோப்பிய ஆடையொன்றை வாங்குவதற்காக அவர், ஒருமுறை 200,000 ரூபாயைச் செலவளித்துள்ளார்” என்று குறிப்பிட்டார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .