Princiya Dixci / 2017 பெப்ரவரி 06 , மு.ப. 02:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
தர்ஷன சஞ்சீவ
வடக்கு மாகாணத்தில் கலப்பு நீதிமன்றமொன்றை உருவாக்குவதற்கு, அம்மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் முயன்றுவருவதாகத்
தெரிவித்த திறன்கள் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சிகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க, அவரின் அந்த முயற்சிகள், வெறுமனே கனவும் எனவும் அவை நனவாகாது எனவும் குறிப்பிட்டார்.
களுத்துறையில் நடைபெற்ற சுதந்திரதின நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.
சில அரசியல்வாதிகள், வெளிநாட்டுச் சக்திகளினதும் நிறுவனங்களினதும் அடிமைகளாயுள்ளனர் எனக் குற்றஞ்சாட்டிய அமைச்சர், சில வசதிகளைப் பெற்றுக் கொள்வதற்காகவே அவர்கள் இவ்வாறு செயற்படுகின்றனர் எனவும் தெரிவித்தார்.
“எங்களுடைய படையினருக்கும் பொலிஸ் உறுப்பினர்களுக்கும் நாங்கள் துரோகமிழைக்க மாட்டோம். வட மாகாணத்தில் கலப்பு நீதிமன்றமொன்று உருவாக்கப்படுமென்ற செய்தியொன்றை நான் பார்த்தேன். முதலமைச்சரின் கனவே இதுவென்பதை நான் வலியுறுத்த விரும்புகிறேன். அது, நிஜமாகாது” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .