Princiya Dixci / 2017 பெப்ரவரி 06 , மு.ப. 02:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
முல்லைத்தீவு கேப்பாப்புலவு பிலவுக்குடியிருப்பு மக்களினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போராட்டம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கூடிய கவனம் செலுத்தியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிலவுக்குடியிருப்பு மக்களின் போராட்டம் தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்நிலையிலேயே, மக்களின் கோரிக்கை தொடர்பில் ஆராய்ந்து, உடனடித் தீர்வினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கவுள்ளதாக, உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்விவகாரம் தொடர்பில் இன்றையதினம் பாதுகாப்புத் தரப்பினருடன் ஜனாதிபதி கலந்தாலோசிக்கக்கூடும் எனவும் அத்தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .