Thipaan / 2017 பெப்ரவரி 07 , பி.ப. 11:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
அடுத்த அரசியல் புலியாக வரும் வல்லமை இலங்கைக்கு உள்ளதென, ஐக்கிய அமெரிக்கா கூறியுள்ளது.
அமெரிக்கா இராஜாங்க திணைக்களத்தில் பொது இராஜதந்திரம் மற்றும் பொது விவகாரங்களுக்கான உப செயலாளர் புறூஸ் வாட்டன், இலங்கையின் இந்த வல்லமை பற்றி ஒருபோதும் சந்தேகம் இருக்கவில்லை எனக் கூறினார்.
“ இப்போதைய நிலைமையில், அடுத்த ஆசியப்புலி இலங்கையாகும். அதற்கான ஆற்றலைப் பெற்றுள்ளது. என அமெரிக்காவில் நடந்த இலங்கையின் சுதந்திர தின கொண்டாத்தின் போது அவர் கூறினார்.
“வேலை வாய்ப்புகள் உருவாக்கவும், முதலீடுகளை ஊக்குவிக்கவும் வணிகத்தை முன்னேற்றவும் உதவுவதன் மூலம் இலங்கையின் சிறிய நடுத்தர முயற்சிகளுக்கு அமெரிக்கா உதவுகின்றது என அவர் கூறினார்.
“இலங்கையில் ஏற்பட்டுள்ள ஜனநாயக முன்னேற்றம் இருந்திராதுவிடின் இந்த ஒத்துழைப்பு சாத்தியமாகியிராது என அவர் கூறினார்.
“இலங்கை வளர்ச்சியைப் பொறுத்து இளையதாக இருப்பினும், அமெரிக்காவையும் ஸ்ரீலங்காவையும் பழைய நண்பர்கள்” என அவர் கூறினார்.
21 ஆம் நூற்றாண்டில் ஒரு நாட்டில் மிக முக்கிய சொத்தாக அதன் மக்களே இருப்பர். பெரிய சாதனைகளைப் புரியக்கூடிய அறிவுள்ள மக்களை, இலங்கையால் பெறக்கூடியதாக இருக்கும் என அமெரிக்க அதிகாரி கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .