துமிந்தவின் உடல்நிலை: அறிக்கையிட விசேட வைத்திய குழு
14-02-2017 07:45 AM
Comments - 0       Views - 43

பேரின்பராஜா திபான்

முன்னாள் எம்.பியும் மரண தண்டனைக் கைதியுமான துமிந்த சில்வாவின் உடல்நிலை தொடர்பாக, விசேட வைத்திய குழுவின் அறிக்கையை எதிர்வரும் 28ஆம் திகதியன்று சமர்ப்பிக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்ற மேலதிக நீதவான் அருணி ஆட்கல, நேற்று (13) உத்தரவிட்டார்.

துமிந்த சில்வாவின் உடற்கோளாறுகள் தொடர்பில் பரிசீலித்து அறிக்கையிடுவது தொடர்பில் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் அனில் ஜயசிங்கவுக்கு, கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் பணிப்புரை விடுக்கப்பட்டது. 

அதற்கு அனில் ஜயசிங்கவினால் வழங்கப்பட்ட பதில் கடிதத்தில், துமிந்த சில்வாவைப் பரிசீலிப்பதற்கு நரம்பியல் வைத்திய நிபுணர் அடங்கிய விசேட வைத்திய நிபுணர் குழுவொன்றை நியமிக்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.  

விசேட வைத்திய நிபுணர் குழுவை அமைக்குமாறு உத்தரவிட்ட நீதவான், துமிந்த சில்வாவை, கொழும்பு தேசிய வைத்தியசாலைக்குக் கொண்டு சென்று சோதனைக்கு உட்படுத்தி, அந்த அறிக்கையை எதிர்வரும் 28ஆம் திகதி நீதிமன்றில் சமர்பிக்குமாறு, சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.  

2010, 2011 மற்றும் 2013 ஆகிய மூன்று ஆண்டுகளுக்கான சொத்து மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான ஆவணங்களைக் கையளிக்காதன் காரணமாக, இலஞ்ச மற்றும் ஊழல் தொடர்பான சாத்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவினால் அவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. 

முன்னாள் எம்.பியான பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் படுகொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட துமிந்தவுக்கு மரண தண்டனைத் தீர்ப்பளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

"துமிந்தவின் உடல்நிலை: அறிக்கையிட விசேட வைத்திய குழு" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty