நிம்மதி
14-02-2017 04:33 PM
Comments - 0       Views - 102

காதல் கவிதைப் பாட
ஆசைதான் எனக்கு ஆனாலும்
என் மலையக மகிமையை பாட
வாய் பலமுறை எத்தனிக்கின்றது

இன்று நிம்மதியை தேடி
மனிதன் அலைந்து அலைந்து
வெறுத்து நிற்கின்றான் அதற்காகதான்
சொல்கின்றேன் ஒருமுறை வந்து
இயற்கை எழில் கொஞ்சும்
மலைநாட்டை பாருங்கள் நிம்மதி
எங்கு இருக்கும் என்று உங்களுக்கு
நான் சொல்ல தேவையில்லை.

கண்ணுக்கு எட்டியத்தூரமெல்லாம்
பெரிய மலைகள் அருவிகள்
என்று ஒரு சொர்க்கத்தையே
இறைவன் இங்கு படைத்து விட்டான்
என்று எண்ண தோன்றுகின்றது

அதுமட்டுமா? மலர்களின் வாசனையும்
மண்ணின் வாசனையும் என்னுள்
வந்து ஏதேதோ செய்கின்றது.

உயிர் வாழ உணவு தேவை
அதிலும் சுவையான உணவு
கிடைத்தால் இதைவிட வேறென்ன
என்று எண்ணத்தோன்றும் அதற்காக
சரி இங்கு விளையும் உணவினை
ஒருமுறை உண்டுபாருங்கள் நீங்கள்
நினைக்கும் போதெல்லாம் நாவில்
உமிழ்நீர் சுரக்கும் இதைவிட நிம்மதியை
வேறு எங்கு தேட போகின்றீர்கள்

வரதராஜன் யுகந்தினி

"நிம்மதி" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty