Princiya Dixci / 2017 பெப்ரவரி 15 , பி.ப. 08:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொள்ளைக் குற்றச்சாட்டில் குற்றவாளிகளாக இனங்காணப்பட்ட இலங்கையர் அறுவருக்கு, டுபாய் நீதிமன்றம் தலா 5வருடங்கள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில், டுபாயில் அதிசொகுசு ஆடம்பர வீடுகளில் தங்க நகைகள் உள்ளிட் பெறுமதியான
பொருட்களை திருடினார் என்ற இந்த அறுவருக்கு எதிராகவும் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது என்று டுபாய் கஜிலி டைம்ஸ் பத்திரிகை நேற்று (15) செய்தி வெளியிட்டிருந்தது.
நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டுள்ள சிறைத்தண்டனை காலம் நிறைவடைந்ததன் பின்னர், குற்றவாளிகளான அந்த அறுவரையும் நாடுகடத்துமாறும் அந்த நீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையைச் சேர்ந்த 26 வயதுக்கும் 40 வயதுக்கும் இடைப்பட்ட அறுவருக்கே இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவர்களில் ஐவர், எந்தவிதமான வேலைவாய்ப்புகளும் இன்றி டுபாய் தங்கியிருந்தவர்கள் என்றும் மற்றையவர் சாரதியாக தொழில்புரிந்தவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2015ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 11ஆம் திகதியன்றே இக்குழுவினர் கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர் என்று, டுபால் அல்-பர்ஷா பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
அந்த முறைப்பாட்டுக்கு அமைய, பொலிஸாரினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணை நிறைவிலேயே டுபாய் நீதிமன்றம் மேற்கண்டவாறு தீர்ப்பளித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .