Princiya Dixci / 2017 பெப்ரவரி 16 , மு.ப. 02:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்ரீ லங்கன், மிஹின் லங்கா எயார்லைன்ஸ்கள் போன்ற அரச நிறுவனங்களை, பேர்ப்பெச்சுவல் ட்ரெஷரிஸ் பிரைவெட் லிமிட்டெட் வாங்குகின்ற சதித்திட்டமொன்று காணப்படுவதாக, ஒன்றிணைந்த எதிரணி தெரிவித்தது.
பெரியளவில் இயங்குகின்ற சில அரச நிறுவனங்களை, பேர்ப்பெச்சுவல் நிறுவனம் வாங்க முயலுகின்றது என்பது, நம்புவதற்கு போதுமான காரணங்கள் காணப்படுவதாகவும், அவ்வெதிரணியின் உறுப்பினர் ஜீ.எல்.பீரிஸ் கூறினார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில், தொடர்ந்து உரையாற்றிய அவர், “வாங்குபவரின் உண்மையான அடையாளத்தை மறைத்து, இன்னொரு நிறுவனத்தினைப் பயன்படுத்தியே, மேற்படி அரச நிறுவனங்களை, பேர்ப்பேச்சுவல் ட்ரெஷரிஸ் நிறுவனம் கொள்வனவு செய்ய முயல்கிறது” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .