2026 ஜனவரி 03, சனிக்கிழமை

‘எம்.பிக்களுக்கு இரட்டை மொழி தேர்ச்சி கட்டாயம்’

Princiya Dixci   / 2017 பெப்ரவரி 21 , மு.ப. 05:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

“நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகியுள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும், இரட்டை மொழித் தேர்ச்சி இருக்க வேண்டும்” என, தேசிய சகவாழ்வு மற்றும் தேசிய அரசகரும மொழிகள் அமைச்சர்  மனோ கணேசன் தெரிவித்தார்.  

கொழும்பு பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில், நேற்று இடம்பெற்ற, தேசிய சமய மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.  

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், “இரட்டை மொழிகளிலும் தேர்ச்சியற்ற அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களால், வடக்கு மற்றும் தெற்கிலுள்ள மக்களின் பிரச்சினைகளைப் புரிந்துகொள்ளவோ அல்லது அப்பிரச்சினைகளுக்குத் தீர்வு பெற்றுக்கொடுக்கவோ முடியாது. அதனால், அவர்களுக்கு இரட்டை மொழித் தேர்ச்சியைக் கட்டாயப்படுத்தும் சட்டம் அமுல்படுத்தப்படல் வேண்டும்” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X