2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

'சிறுபான்மையின அரசியல் தலைவர்கள் பேசுவதன் மூலமே அரசியல் தீர்வைப் பெற முடியும்'

Suganthini Ratnam   / 2017 பெப்ரவரி 21 , மு.ப. 09:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ்
 
சிறுபான்மையினங்களைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் தங்களுக்குள் கலந்துரையாடி ஒருமித்த கருத்துடன் அரசாங்கத்துடன் பேசுவதன் மூலமே நிரந்தர அரசியல் தீர்வைப் பெற்றுக்கொள்ள முடியும் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்;டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.
 
மட்டக்களப்பு, கல்லடி விநாயகர் வித்தியாலயத்தின் வருடாந்த விளையாட்டுப் போட்டியின்  இறுதிநாள் நிகழ்வு திங்கட்கிழமை (20) மாலை நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
 
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றியபோது, 'இந்த நாட்டில் பாதிக்கப்பட்ட சிறுபான்மையின மக்களுக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்க வேண்டுமாயின், தமிழ் மக்களின் தலைவர்கள் ஒன்றிணைய வேண்டும். ஒருமித்த கருத்தைக் கூற வேண்டும்.
 
மேலும், தமிழ் அரசியல் தலைவர்களும் முஸ்லிம் அரசியல் தலைவர்களும் மனம் விட்டுப் பேசி தீர்க்கமான முடிவை எடுத்துக்கொண்டு அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும். இரு தலைமைகளும் தன்னித்தனியே வௌ;வேறு விடயங்களைப் பேசுவதால் பெரும்பான்மையினச் சமூகத்திடமிருந்து தீர்வைப் பெற்றுக்கொள்ள முடியாது' என்றார்.  
'காலத்துக்கு காலம் வெளிநாட்டு பிரதிநிதிகள் வந்து அரசாங்கத்துடன் பேசிவிட்டுச் செல்கிறார்கள். இதனால், எமது மக்களுக்கு எந்தவித பிரயோசனமும்; கிடைக்கவில்லை.  தற்போது இலங்கைக்கு வருகை தந்துதுள்ள இந்தியாவின் வெளிவிவகார செயலாளர் மற்றவர்களைப் போல் வெறுமனே பேசிவிட்டுச் செல்லாமல், அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்' என்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .