2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

கடந்த ஆட்சியாளர்கள் “ஒற்றுமைப்படுத்த தவறிவிட்டார்கள்”

Gavitha   / 2017 பெப்ரவரி 21 , பி.ப. 01:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.யூ.எம். சனூன்

 “நாட்டிலே நிரந்தர சமாதானத்தைக் கொண்டுவர அனைத்து சமயத் தலைவர்களும் முன்வரவேண்டும்” என, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்க தெரிவித்தார்.  

மேலும், “முன்னைய அரசியல் தலைவர்கள், தமக்கான வாக்குகளை அதிகரித்துக் கொள்வதற்காக முயற்சித்தார்களே தவிர, நாட்டை ஒற்றுமைபடுத்தவேண்டும் என்ற நோக்கில் செயற்பட தவறி விட்டார்கள்” என்றும் குறிப்பிட்டார். 

 தேசிய சமாதானப் பேரவையின் (சிம்போஸியம்) வருடாந்த தேசிய மாநாடு, கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில், திங்களன்று ஆரம்பமானது. இதில், பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், 

 “இந்த நாடு சுதந்திரம் அடைவதற்கு, நாட்டின் சகல சமய தலைவர்களும் பங்களிப்பு நல்கியுள்ளனர். எனினும், பெரும்பான்மை இன மக்கள், அவர்களின் நாடாக இந்த நாட்டினை பிரகடனப்படுத்த முயன்றார்கள். 

 எமது மாவட்டத்தில், நாம் மதத் தலைவர்களுக்கான செயலமர்வுகளை நடத்தியுள்ளோம். ஆயிரக்கணக்கான சமயத் தலைவர்கள், அதில் பங்கு பற்றி இனவாதத்துக்கு எதிராக செயற்பட ஆரம்பித்துள்ளனர். 

 சிறுபான்மை மக்களுக்கு சந்தர்ப்பங்களை வழங்கி, நாட்டில் சமாதானத்தை கட்டியெழுப்ப, நாம் பல்வேறு அர்ப்பணிப்புகளை மேற்கொண்டு வருகிறோம். 13ஆவது திருத்தம் போதாதா என சிலர் கேள்வி எழுப்புகின்றனர். சகல மக்களையும் உள்ளடக்கிய தீர்வுத் திட்டம் தேவைப்படுகிறது. நாட்டில் இன்னும் மாற்றங்கள் வேண்டும். சமயத் தலைவர்கள் சொல்வதை நாட்டின் அதிகாரிகளும் பொதுமக்களும் செவிமெடுக்க தயாராக உள்ளார்கள்” என்றார். 

 “யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட குறிப்பாக, கணவனை இழந்த, பிள்ளைகளை இழந்த பெண்களுக்கு, நாம் அதிகமான சேவைகளை வழங்கி வருகிறோம். காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகள், இன்னும் வாழ்கிறார்கள், என அவர்கள் நம்புகிறார்கள். எமது சேவையின் மூலம், அவர்கள் ஆகக்குறைந்தது நட்டஈட்டையாவது பெற்றுக்கொள்ளும் வாய்ப்புகள் தோன்றுகின்றன” எனவும் தெரிவித்தார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .