2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

‘கிளி, முல்லையில் நகர சபையே இல்லை’

Kogilavani   / 2017 பெப்ரவரி 21 , பி.ப. 10:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜே.ஏ.ஜோர்ஜ்

நாட்டில் இருக்கின்ற 25 மாவட்டங்களுக்கும் நகர சபைகள் இருக்கின்றன. எனினும், கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய இரண்டு மாவட்டங்களிலும் ஒரு நகர சபையேனும் இல்லை என்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பியான சார்ள்ஸ் நிர்மலநாதன், சபையில் சுட்டிக்காட்டினார்.  

நாடாளுமன்றத்தில் நேற்று (21) இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தின் போது, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரிடம்,   வட மாகாண சபையின் கீழுள்ள, மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி, மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களுக்குரிய மடு, ஒட்டுசுட்டான், கண்டாவளை மற்றும் மருதகேணி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் பிரதேச சபைகள் ஸ்தாபிக்கப்படவில்லை என்பதை அமைச்சர் அறிவாரா?" என்று வினவியிருந்தார்.  

கேள்விகளுக்கு பதிலளித்த மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி பைஸர் முஸ்தபா, "அங்கு பிரதேச சபைகள் ஸ்தாபிக்கப்படவில்லை என்பதை நான், அறிவேன். எனினும், சட்டத்தின் பிரகாரம் புதிய பிரதேச சபைகளை உருவாக்கமுடியாது.   

எனினும், நாடாளாவிய ரீதியில் பிரதேச சபைகள் ஸ்தாபிக்கப்பட வேண்டிய பிரதேசங்கள் தொடர்பில் ஆராய குழுவொன்றினை நியமித்துள்ளேன். இந்த விவரங்களுடன் கோரிக்கையொன்றை முன்வைத்தால், உரிய குழுவுக்கு ஆற்றுப்படுத்தலாம்" என்றார்.   

குறுக்குக் கேள்வியை எழுப்பிய சார்ல்ஸ் நிர்மலநாதன் எம்.பி, மேற்குறிப்பிட்ட இந்த நான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளும் கடந்த 25 வருடங்களாக இயங்குகின்ற. சுமார் 100 கிலோமீற்றர் சுற்றளவில் உள்ள பகுதியிலேயே அங்குள்ள அதிகாரிகள் கடமையாற்றவேண்டியுள்ளது என்று சுட்டிக்காட்டினார்.  

அத்துடன், மன்னார் நகர ​சபையை, மாநகர சபையாகவும், மன்னார் பிரதேச சபையை நகர சபையாகவும் மாற்றியமைத்து தருமாறு கோரிக்கை விடுத்த சார்ல்ஸ் நிர்மலநாதன், நாட்டில் உள்ள 25 மாவட்டங்களில், கிளிநொச்சி மற்றும் முல்லைதீவு ஆகியனவே ஒரேயொரு நகரசபையும் இல்லாத மாவட்டங்களாகும் என்றும் சுட்டிக்காட்டினார்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .