கத்தியுடன் சமந்தா
23-02-2017 12:22 AM
Comments - 0       Views - 353

விஜய்யுடன் 'கத்தி' திரைப்படத்தில் நாயகியாக நடித்த சமந்தா, அந்த திரைப்படத்தில் கத்தி கூடப் பேசியிருக்க மாட்டார். ஆனால், நேற்று அவர் டிவிட்டரில் கையில் கத்தியுடன் வெளியிட்ட புகைப்படம் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

'ஆரண்ய காண்டம்' திரைப்படத்தை இயக்கிய தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில் பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவில் விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் நடிக்கும் படத்தில் சமந்தா நாயகியாக நடிக்கிறார். அப்படத்தின் புகைப்படம் ஒன்றைத்தான் நேற்று முன்தினம் சமந்தா அவருடைய டிவிட்டரில் வெளியிட்டிருந்தார்.

தூங்கிக் கொண்டிருக்கும் ஒருவர் (விஜய் சேதுபதி ?) பக்கத்தில் கறியை வெட்டும் கத்தியுடன் சமந்தா அமர்ந்திருக்கும் புகைப்படம் அது. “தியாகராஜன் குமாரராஜாவின் ரொமான்டிக் காமெடியிலிருந்து...” என அந்தப் புகைப்படத்தைப் பற்றி சமந்தா குறிப்பிட்டுள்ளார்.

படப்பிடிப்பு ஆரம்பமான போது பெண் வேடத்தில் இருக்கும் விஜய் சேதுபதியின் புகைப்படம் வெளியானது. அதன் பிறகு இப்போது சமந்தாவின் புகைப்படம் வெளியாகியுள்ளது. திரைப்படத்தின் பெயர் 'அநீதிக் கதைகள்' என வைத்திருப்பதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல் ஏற்கெனவே பரவியுள்ளது.

"கத்தியுடன் சமந்தா" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty