2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

செலிங்கோ லைஃவ் பிரதம டிஜிட்டல் அதிகாரியாக உபமாலிகா ரட்னாயக்க

Gavitha   / 2017 பெப்ரவரி 23 , பி.ப. 08:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

செலிங்கோ லைஃவ் தனது பிரதம டிஜிட்டல் அதிகாரியாக, (CDO) உபமாலிகா ரட்னாயக்கவை, உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நியமித்துள்ளதாக அறிவித்துள்ளது. டிஜிட்டல் புத்தாக்கச் செயற்பாடுகள் மற்றும் உற்பத்தி விநியோகம் என்பனவற்றுக்குத் தலைமை தாங்கும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.  

இவர் செலிங்கோ லைஃப்பில் 17 வருடங்கள் பணியாற்றியுள்ளார். மேலும், இவர் தான் இந்தக் கம்பனியின் முதலாவது தகவல் துறை அதிகாரியாவார்.  

பிரிட்டிஷ் கணினி கழகத்தின் (MBCS) உறுப்பினரான இவர், அவுஸ்திரேலிய கணினி கழகம், மற்றும் தகவல் தொழில்நுட்பப் பட்டயத் தொழிற்சார் அதிகாரி மற்றும் CISA தகவல் தொழில்நுட்பம் (ISACA) கொழும்புப் பல்கலைக்கழக கணினி பிரிவில் இருந்து கம்பியூட்டர் விஞ்ஞானத்தில் MSc (MCS) ஆகிய தொழில்சார் தகுதிகளையும் கொண்டுள்ளார். 2013ஆம் ஆண்டில் ரட்ணாயக்க, தென்கிழக்கு ஆசிய பிராந்திய கணினி சம்மேளனத்தால் (SEARCC) தகவல் தொலைத்தொடர்பு தொழில்நுட்ப துறையில் சிறந்த பெண் தலைமைத்துவத்துக்கான விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். இந்த அமைப்பு ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் உள்ள தேசிய மட்டத்திலான தகவல் தொழில்நுட்பத் துறை கழகங்களின் ஒன்றியமாகும்.  

“உபமாலிகா தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்ப கணக்காய்வு ஆகியவற்றில் ஆழமான அனுபவம் கொண்டவர். செலிங்கோ லைஃப்பில் இணைவதற்கு முன், அவர் மக்கள் வங்கி மற்றும் கணக்காய்வாளர் நாயகத் திணைக்களம் என்பனவற்றில் பணியாற்றியுள்ளார்” என்று கம்பனியின் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான ஆர்.ரெங்கநாதன் கூறினார். “செலிங்கோ லைஃப்பில் அவர், பல டிஜிட்டல் மயத் திட்டங்களை வழிநடத்தி உள்ளார். மேலும், திட்டமிடப்பட்டுள்ள பல தகவல் தொழில்நுட்ப அபிவிருத்தி திட்டங்களையும் அவர் வழி நடத்தவுள்ளார்” எனறார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .