2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

களுதாவளை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

Suganthini Ratnam   / 2017 பெப்ரவரி 24 , மு.ப. 05:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல், வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு மாவட்ட காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளர் என்.விமல்ராஜ் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

களுதாவளை கடற்கரை வீதியை அண்டி அமைந்துள்ள மேற்படி பணிப்பாளர் என்.விமல்ராஜ்ஜின் வீட்டுக்கு புதன்கிழமை (22) இரவு மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்கள் இருவர், அவர் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொண்டுவிட்டுச் தப்பிச்சென்றுள்ளனர்.

இதன்போது படுகாயமடைந்த இவர், களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, இதன் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றார்.

இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தைக் கண்டித்து இன்று (24) காலை களுவாஞ்சிக்குடி இராசமாணிக்கம் சிலை முன்பாக பட்டிருப்புத்தொகுதி தமிழ் சமூகம் அமைப்பின் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போதே மேற்படி கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

மேலும், துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துக்கு  எதிராகச் சட்டந டவடிக்கை எடுக்குமாறு கோரிய ஜனாதிபதிக்கான மகஜர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசனிடமும் பிரதமருக்குரிய மகஜர் த.தே.கூ நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரனிடமும் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தருக்கான மகஜர் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கத்திடமும் பட்டிருப்புத்தொகுதி தமிழ் சமூகத்தின் இணைப்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பா.அரியநேத்திரன்; கையளித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .