George / 2017 பெப்ரவரி 28 , மு.ப. 06:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், வேலூர் சிறையில் உள்ள பேரறிவாளன், வேலூர் அரச வைத்தியசாலையில் திடீரென அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 25 ஆண்டுகளாக நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் சிறையில் உள்ளனர்.
இவர்களை விடுதலை செய்வது குறித்து இந்திய மத்திய மாநில அரசாங்கங்கள் இழுத்தடித்து வருகின்றன. இதனால் 25 ஆண்டுகளாக இவர்கள் சிறையில் உள்ளனர்.
இந்நிலையில் பேரறிவாளன், வேலூர் அரச வைத்தியசாலையில் திடீரென எதற்காக அனுமதிக்கப்பட்டார் என்பது குறித்த காரணம் இன்னும் வெளியாகவில்லை. அதே நேரத்தில் வைத்தியசாலையைச் சுற்றி பொலிஸார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர், சிறையில் இருந்த சக கைதி ராஜேஷ் கண்ணா என்பவரால் இரும்பு கம்பி கொண்டு பேரறிவாளன் தாக்கப்பட்டார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, இதே வேலூர் அரச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு 6 தையல்கள் தலையில் போட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .