Princiya Dixci / 2017 பெப்ரவரி 28 , மு.ப. 10:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மொஹொமட் ஆஸிக்
தோட்டத்தில் தமக்கு இரண்டு ஏக்கர் நிலம் வீதம் 500 குடும்பங்களுக்கும் வழங்கும் வரை எமது போராட்டம் தொடரும் என கண்டி, உன்னஸ்கிரிய தோட்டத்தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
கண்டி, உன்னஸ்கிரிய ஹெயார் பார்க் தோட்டத்தை தனியாருக்கு விற்பனை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தோட்டத்தொழிலாளர்களால்,இன்று ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.இதன்போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.
நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள், இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்குகொண்டதுடன், உன்னஸ்கிரிய- லூல்வத்தை பாதையை மறித்து ஆர்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.
சுமார் 500 குடும்பங்களைச் சேர்ந்த 1,800 பேர் இத் தோட்டத்தில வாழ்வதாகவும் இவர்களுக்கு தெரியாமல் தோட்டத்தை விற்பனை செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
மேற்படி தோட்டத்தில், தமக்கு இரண்டு ஏக்கர் நிலம் வீதம் 500 குடும்பங்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்றும் அது வரை போராட்டம் தொடரும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
அத்துடன் தமக்கு இது காலவரை மாதத்துக்கு மூன்று அல்லது நான்கு நாட்களே வேலை வழங்கப்படுவதாகவும் அது குறைந்தது 21 நாட்களுக்காவது வழங்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .