உயர்வான நன்மக்களே உலகின் பிரமாக்கள்
07-03-2017 09:36 AM
Comments - 0       Views - 30

சுட்டித்தனமாகச் செயல்களைப் படு உற்சாகமாகச் செய்யும் குழந்தைச் செல்வங்களை அடக்கி ஒடுக்க முற்பட வேண்டாம்.

அவர்களின் புத்திசாலித்தனமான வேலைகளை, அதன் ​அழகைக் கண்டு இரசியுங்கள். 

ஆனால், அதே சமயம் அவர்களின் உடலுக்கு ஊறு விளையாமல் பார்த்துக் கொள்ளுங்கள். தங்களுடன் உறவாடி மகிழ்ந்திருக்கவே அவர்கள் மிகவும் பிரியப்படுகின்றார்கள்.

தாங்கள் தொந்தரவு இன்றிப் பொழுதுபோக்காகக் குழந்தைகளின் குறும்பை இரசிக்காமல் அவர்களை வைது கொள்ளுதல் மிகவும் தவறாகும்.

இன்று பெரும்பாலான பிள்ளைகள் பெற்றோரின் பாராமுகத்தினாலேயே பிஞ்சு வயதில் நெஞ்சம் வருந்தித் தங்கள் வாழ்வின் திசையை மாற்ற எத்தனிக்கின்றார்கள்.

பாசத்தை, நேசத்தை பரிவுடன் காட்டிட சற்று நேரத்தை அவர்களுக்கு ஒதுக்குக.

உயர்வான நன்மக்களே உலகின் பிரமாக்கள்.

 

வாழ்வியல் தரிசனம் 07/03/2017

- பருத்தியூர் பால. வயிரவநாதன்

"உயர்வான நன்மக்களே உலகின் பிரமாக்கள்" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty