Princiya Dixci / 2017 மார்ச் 07 , மு.ப. 04:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரொமேஸ் மதுசங்க
புனர்வாழ்வு பெறாத, தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் (எல்.ரீ.ரீ.ஈ), அவர்களால் மறைத்துவைக்கப்பட்ட ஆயுதங்கள், சேவையிலிருந்து தப்பிச் சென்ற பாதுகாப்புத் தரப்பு உறுப்பினர்களாலேயே, நாட்டுக்குள் அச்சுறுத்தலான நிலைமை தோற்றுவிக்கப்பட்டுள்ளதெனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்தார்.
அத்துடன், பாதாள உலகக் கோஷ்டியை இல்லாதொழிக்கும் வேலைத்திட்டத்துக்கு, பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும். சட்டம் மற்றும் பொலிஸைக் கட்டுப்படுத்த, ஒருவருக்கும் ஒருபோதும் இடமளிக்கப்படமாட்டாதெனவும் அவர் கூறினார்.
வவுனியா பொலிஸ் கட்டடத் தொகுதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட விகாரையின் திறப்புவிழா, நேற்று (06) இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு தொடர்ந்துரையாற்றிய அவர் கூறியதாவது,
“களுத்துறை சிறைச்சாலைத் துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பில், எவர் மீதும் நாம் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கப்போவதில்லை. எமது குறைபாடு காரணமாகவே இந்தத் தவறு நடந்தது என்பதை நாம் ஒத்துக்கொள்கிறோம். எமது குறைகளை நாம் நிவர்த்தி செய்துகொள்ள வேண்டும்.
அத்தோடு, பாதாள உலகக் கோஷ்டியினரின் நடவடிக்கைகளுக்கு இனி ஒருபோதும் இடமில்லை. அதற்காக, பொலிஸ் விசேட அதிரடிப்படையினரைக் கடுமையான கடமைகளில் ஈடுபடுத்துவேன்.
எவ்வாறாயினும், கடந்த வருடம் இடம்பெற்ற குற்றச்செயல்களின் எண்ணிக்கைகளுடன் ஒப்பிட்டுப் பார்க்குமிடத்து, இவ்வருடக் குற்றச்செயல்களின் எண்ணிக்கைக் குறைவாகும்.
இருப்பினும், இடம்பெற்றுள்ள குற்றச்செயல்களை நோக்கும் போது, குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதென்றே காட்டுகிறது” என, அவர் மேலும் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .