சாதாரண தர மாணவர்களுக்கு கொழும்பில் இலவச வகுப்புகள்
07-03-2017 03:21 PM
Comments - 0       Views - 3

கொழும்பு மாவட்டத்தில் கல்வியில் பின்தங்கிய மாணவர்களுக்கு இசவசமாக கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சைக்கான வகுப்புகள் நடத்தப்படவுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானின் வழிகாட்டலில் மேல்மாகாண சபை உறுப்பினர்களான ஏ.ஜே.எம்.பாயிஸ் மற்றும் அர்ஷாட் நிஸாமுதீன் ஆகியோரின் முயற்சியில், கொழும்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவினால், இத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

கொழும்பு 10 அல் ஹிதாய வித்தியாலயத்திலேயே திங்கள் முதல் வியாழன் வரை மாலை 3 மணிக்கு இவ் வகுப்புகள் இடம்பெறவுள்ளன. தேர்ச்சிபெற்ற ஆசிரியர்களால் சிங்கள மற்றும் தமிழ் மொழிப் பிரிவுகளுக்காக, நான்கு வகுப்புகள் இடம்பெறவுள்ளன. கட்டாயப்பாடங்கள் அனைத்தும் இதன்போது நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் கொழும்பு மாவட்ட முஸ்லிம் அதிபர்களுக்கான கூட்டமொன்றின்போது அவர்களின் ஆலோசனைகளும் இவ்வகுப்புகளுக்குப் பெறப்பட்டது. இத்திட்டத்தைக் கட்டாயம் முன்னெடுக்க வேண்டும் எனவும் அதிபர்கள் வழியுறுத்தினர்.

அத்துடன், பாடசாலைகளினூடாக கல்வியில் பின்தங்கியிருக்கும் மாணவர்களின் பட்டியல் பெறப்பட்பட்டதாகவும் ஆரம்ப கட்டமாக 200 மாணவர்களை உள்ளீர்க்கத் திட்டமிட்டுள்ளதாகவும் இத்திட்டத்துக்குப் பொறுப்பான அப்துல் அஸீஸ் ஆசிரியர் தெரிவித்தார்.

"சாதாரண தர மாணவர்களுக்கு கொழும்பில் இலவச வகுப்புகள்" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty