விளையாட்டுத்துறை பிரதியமைச்சரின் இணைப்புச் செயலாளர் இராஜினாமா
07-03-2017 03:26 PM
Comments - 0       Views - 83

அஸ்லம் எஸ்.மௌலானா

விளையாட்டுத்துறை பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸின் இணைப்புச் செயலாளர் சட்டத்தரணி எம்.ஏ.அன்ஸில், அப்பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளார்.

தனிப்பட்ட சில காரணங்களுக்காக குறித்த முடிவினைத் தான் எடுத்துள்ளதாக, பிரதியமைச்சருக்கு எழுதியுள்ள இராஜினாமாக் கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளார்.

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரான இவர், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் செயலாளர் நாயகம் எம்.ரி.ஹசன் அலியுடன் இணைந்து, கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு எதிராகப் பொதுக் கூட்டங்களை நடத்தி வருகின்ற நிலையிலேயே, அவர் பிரதியமைச்சரின் இணைப்புச் செயலாளர் பதவியை இராஜினாமா செய்துள்ளதாகத் தெரியவருகின்றது.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் அதியுயர்பீட உறுப்பினரான எம்.ஏ.அன்ஸில், அக்கட்சியின் சமய, கலாசார விவகார பொறுப்பாளராகவும் பதவி வகித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

"விளையாட்டுத்துறை பிரதியமைச்சரின் இணைப்புச் செயலாளர் இராஜினாமா" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)




Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty