மாணவர்கள் வீடுகளில்: பெற்றோர் பாடசாலையில்
07-03-2017 03:42 PM
Comments - 0       Views - 9

எம்பிலிபிட்டிய, கொலன்ன பிரதேசத்திலுள்ள பாடசாலை ஒன்றில், மாணவர்களை வீட்டில் நிறுத்தி விட்டு, அனைத்துப் பெற்றோர்களும் பாடசாலைக்குச் சமூகமளித்த சம்பமொன்று, இன்று இடம்பெற்றுள்ளது. இதனால், அப்பாடசாலையில், ஒரு மாணவர் வரவு கூட காணப்படவில்லை என்றுத் தெரிவிக்கப்படுகின்றது.

முதலாம் தரத்தில் இருந்து 11ஆம் தரம் வரையான வகுப்புகளில் நிலவும்  ஆசிரியர் பற்றாக்குறை தொடர்பில், உரிய அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்ட போதிலும், இதுவரை எவ்விதத் தீர்வும் எட்டப்படாத நிலையிலேயே, பெற்றோர்களால் இந்த அதிரடித் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து, எம்பிலிபிட்டிய வலயக் கல்வி பணிப்பாளர் டபிள்யூ. எம்.கே.தனவர்தன தெரிவித்தாவது,

குறித்த பாடசாலையில், ஆங்கில பாட ஆசிரியருக்கு மாத்திரமே பற்றாக்குறை நிலவுகின்றது. அப்பாடசாலையில் கடமையாற்றிய ஆங்கிலப் பாட ஆசிரியர், வேறு பாடசாலைக்கு இடமாற்றம் பெற்றுச் சென்றமையாலேயே, இந்நிலைமை ஏற்பட்டுள்ளது. இருப்பினும், அவருக்குப் பதிலாக, மேற்படிப் பாடசாலைக்கு, கல்விப் பணிப்பாளரினால் ஆங்கிலப் பாட ஆசிரியர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால் அவர், இதுவரை பாடசாலைக்குச் சமூகமளிக்கவில்லை. இன்னும் ஓரிரு நாட்களில் அவர், கடமைகளைப் பொறுப்பேற்பார்” என்றார்.

"மாணவர்கள் வீடுகளில்: பெற்றோர் பாடசாலையில்" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty