களுத்துறை துப்பாக்கிச்சூடு நாளை களவிசாரணை
07-03-2017 05:23 PM
Comments - 0       Views - 5

களுத்துறை சிறைச்சாலை பஸ் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில், விசாரணைகளை மேற்கொள்ள நியமிக்கப்பட்ட குழு நாளை, சம்பவம் இடம்பெற்ற இடத்துக்குச் செல்லவுள்ளனர்.

கடந்த 27ஆம் திகதி காலை, களுத்துறை சிறைச்சாலை பஸ் மீது இனந்தெரியாத சிலர், துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர். இதில், 7 பேர்  உயிரிழந்ததோடு, இது குறித்து விசாரணைகளை மேற்கொள்ள, சிறைச்சாலைகள் அமைச்சினால் மூவரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டது.

மேலும், குறித்த குழுவினர் கடந்த ஞாயிற்றுக்கிழமை கூடி, ஆரம்பகட்ட விசாரணைகளை முன்னெடுத்த நிலையில், நாளைய தினம், சம்பவ இடத்துக்குச் சென்று, விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளனர்.

இ​ரண்டு மாதங்களினுல் இந்த விசா​ரணையை முடித்து, இறுதி அறிக்கையை ஒப்படைப்பதாக சிறைசாலைகள் அமைச்சு ​தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

"களுத்துறை துப்பாக்கிச்சூடு நாளை களவிசாரணை " இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty