2026 ஜனவரி 07, புதன்கிழமை

‘கைவிலங்கு’ கேக்கை மஹிந்த ஊட்டினார்

Gavitha   / 2017 மார்ச் 07 , பி.ப. 11:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அழகன் கனகராஜ்

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் எம்.பியுமான விமல் வீரவன்சவின் 47ஆவது பிறந்தநாள் நேற்றாகும்(07). அவருடைய பிறந்த நாள் கேக், மிகவும் வித்தியாசமான முறையில் வடிவமைக்கப்பட்டிருந்தது தேசிய சுதந்திர முன்னணியின் கட்சி நிறத்தில் வடிவமைக்கப்பட்டிருந்த கேகில், கைவிலங்கு உருவமும் பொறிக்கப்பட்டிருந்தது. அதிலொரு வலயத்தில், விமலுக்கு இனிய பிறந்தநாள் என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது. 

அதற்கு கீழே, அன்பான விமலுக்கு இனிய பிறந்தநாள் என்று சிங்கள மொழியிலும் எழுதப்பட்டிருந்தது. அவரின் பிறந்த நாள் வைபவம், நாடாளுமன்றத்தில் உள்ள உறுப்பினர்களுக்கான உணவகத்தில் நேற்று (07) பிற்பகல் இடம்பெற்றது. 

இந்த வைபவத்தில் விமல் வீரவன்சவின் மனைவி, மகள் ஆகியோரும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் எம்.பிக்கள் சிலரும் இணைந்துகொண்டனர். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ எம்.பியும் இந்தவைபவத்தில் இணைந்துகொண்டு, விமலுக்கு கேக்கை ஊட்டிவிட்டு, ஆரத்தழுவி தன்னுடைய வாழ்த்தையும் தெரிவித்துக்கொண்டார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .