ஹீரோவுக்கு ரொமான்ஸ் வர ஐஸ்வர்யா என்ன செய்வார் தெரியுமா?
08-03-2017 11:38 AM
Comments - 0       Views - 831

அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தினாலும், இளைஞர்களை கவரும் ரொமான்ஸ் காட்சிகளிலும் நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

“காக்கா முட்டை” திரைப்படத்தில் இரண்டு பையன்களுக்கு அம்மாவாக, ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருந்தார். அந்த திரைப்படத்தில் நடித்து வந்தபோது இனிமேல் இதே இமேஜ் தன்னை ஒட்டிக்கொள்ளுமோ என்று ரொம்பவே பயந்தார்.

அதனால் அதையடுத்து அதேபோன்று மெச்சூரிட்டியான வேடங்கள் வந்தபோது அவர் ஏற்கவில்லை. மாறாக, முடிந்தவரை ரொமான்டிக் கதைகளில் நடிப்பதில் ஆர்வம் காட்டினார்.

ஆனால் தற்போது அவர் மீது பர்பாமென்ஸ் நடிகை என்கிற இமேஜ் விழுந்திருக்கிறது.அதனால் அழுத்தமான கதைகள் என்றால் ஐஸ்வர்யா ராஜேஷை அழைக்கிறார்கள் இயக்குநர்கள்.

ஆனால் அவரோ, அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தினாலும், இளைஞர்களை கவரும் ரொமான்ஸ் காட்சிகளிலும் நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்.

அதோடு, அதிகமாக ரொமான்ஸ் செய்யாத ஹீரோக்களுடன் தான் நடித்தாலும், அந்த மாதிரி காட்சிகளில் நடிப்பதற்கு முன்பு அவர்களிடம் சகஜமாக பேசிப்பழகி, அவர்களையும் ரொமான்ஸ் மூடுக்கு மாற்றி அந்த காட்சியில் நடிக்கிறாராம் ஐஸ்வர்யா ராஜேஷ்.

அப்படி ஹீரோக்களும் இயல்பாக மாறி நடிக்கும்போதுதான் அந்த காட்சிகள் ரசிகர்களை கவரும் என்று கூறும் அவர், இனிமேல் நான் நடித்து வரப்போகிற திரைப்படங்களில் ரொமான்ஸ் காட்சிகள் கூடுதலாகவே இருக்கும் என்கிறார்.

"ஹீரோவுக்கு ரொமான்ஸ் வர ஐஸ்வர்யா என்ன செய்வார் தெரியுமா?" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty