வெற்றிடங்களுக்கு வேலையற்ற பட்டதாரிகளை நியமிப்பது தொடர்பில் கலந்துரையாடல்
08-03-2017 03:46 PM
Comments - 0       Views - 82

-அஸ்லம் எஸ்.மௌலானா, எம்.எஸ்.எம். ஹனீபா,ஜவ்பர்கான், ஏ.எச்.ஏ.ஹுஸைன்

கிழக்கு மாகாணத்திலுள்ள பாடசாலைகளில் நிலவுகின்ற ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கான வெற்றிடங்களுக்கு வேலையற்ற பட்டதாரிகளை நியமிப்பது தொடர்பில்  ஆராயும் கலந்துரையாடல்  பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரைக்கமைய அவரது ஆலோசகர் ஆர்.பாஸ்கரலிங்கம் தலைமையில் எதிர்வரும் 14ஆம் திகதி திறைசேரியில் நடைபெறவுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

கடந்த 28ஆம் திகதி பிரதமரைச் சந்தித்திருந்த  மாகாண முதலமைச்சர்;, வேலையற்ற பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கும் வகையில் கிழக்கு மாகாண அரச சேவையில் நிலவி வருகின்ற வெற்றிடங்களை நிரப்பலாம் என்று ஆலோசனை வழங்கியிருந்தார்.

இம்மாகாணத்தில் 4,703 ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கு வெற்றிடங்கள் இருப்பதாக பிரதமரிடம் தான் சுட்டிக்காட்டியதாக முதலமைச்சர் தெரிவித்தார்.

இந்நிலையிலேயே, தேசிய திட்டமிடல் திணைக்களத்தின் ஏற்பாட்டில்  இது தொடர்பாக கலந்துரையாடி அறிக்கை சமர்ப்பிக்குமாறு பிரதமர் பணித்துள்ளதாகவும் அவர் கூறினார

 

"வெற்றிடங்களுக்கு வேலையற்ற பட்டதாரிகளை நியமிப்பது தொடர்பில் கலந்துரையாடல் " இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty