Kogilavani / 2017 மார்ச் 08 , பி.ப. 12:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.நிதர்ஸன்
'இலங்கைக்கு கால அவகாசம் வழங்கக் கூடாதென, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு கடிதம் எழுதிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அந்தக் கடிதத்தை யோசித்துப் படித்துத்தானா கையெழுத்துப் போட்டிருக்கின்றனர் எனக் கேள்வி எழுப்பிய அக்கட்சியின் பேச்சாளரும் எம்.பியுமான எம்.ஏ.சுமந்திரன், கடிதத்தில் கையெழுத்திட்ட உறுப்பினர்களுக்கு அறிவில்லை என்றும் சாடினார்.
'கூட்டமைப்பைச் சேர்ந்த 11 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலங்கைக்கு கால அவகாசம் கொடுக்க வேண்டாம் என்று கையெழுத்துப் போட்டு கடிதம் அனுப்பியிருக்கின்றார்களாம். அதில், கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் கையெழுத்துப் போடவில்லை. தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவும் கையெழுத்துப் போடவில்லை. நானும் போடவில்லை' எனவும் அவர் தெரிவித்தார்.
'வெளிவிவகாரங்களைக் கையாளுகின்ற எனக்கு, இப்படியொரு கடிதம் அனுப்பப்படுகிறது என்று தெரியாது. தாங்கள் செய்வது மக்களது காதுக்கு இனியதாக இருக்க வேண்டும். நான் கையெழுத்தப் போடாவிட்டால் நாளைக்கு என்னையும் துரோகி என்று சொல்லிப் போடுவார்களே என்றதால் போட்டிருக்கின்றனர். மனித உரிமைகள் கூட்டத் தொடருக்கு, கூட்டமைப்பு போவதில்லை எனத் தீர்மானித்த போது, மக்களுக்கு நன்மையானதையே நாங்கள் செய்வோம் என்றும் மக்கள் விரும்பாததை நாம் செய்யமாட்டோம் என்றும், மக்களுக்குத் தீமையைக் கொண்டுவரும் விடயங்களைச் செய்ய அனுமதிக்க மாட்டோம் என்றும் நான் தெரிவித்திருந்தேன்' என, சுமந்திரன் எம்.பி, மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .