திருக்கோவிலில் கடலரிப்பை தடுக்க நடவடிக்கை
09-03-2017 10:01 AM
Comments - 0       Views - 47

-எம்.எஸ்.எம்.ஹனீபா

திருக்கோவில் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள கடலரிப்பைத் தடுப்பதற்கு கருங்கல்லிலான தடுப்புச் சுவர் நிர்மாணிக்கப்படவுள்ளதாக கடலோரம் பேணல் மற்றும் கடல் மூலவள முகாமைத்துவத் திணைக்களத்தின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் எம்.ஐ.எம்.ஜெஸூர், இன்று (9) தெரிவித்தார்.

கடந்த 6ஆம் திகதி திருக்கோவில் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இது தொடர்பில் ஆராயப்பட்டு,  கடலரிப்பைத் தடுப்பதற்கான நடவடிக்கை எடுப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டது.

திருக்கோவிலுக்கு பொறியியலாளர் குழுவினர்  சென்று ஆய்வு மற்றும் தடுப்புச் சுவர் அமைப்பதற்கான மதிப்பீடு  மேற்கொள்ளவுள்ளனர். இது தொடர்பான அறிக்கை கிடைத்ததும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு தடுப்புச் சுவர் அமைக்கப்படும்  எனவும் அவர் கூறினார்.

திருக்கோவிலில் ஏற்பட்டுள்ள கடலரிப்புக் காரணமாக பொதுமக்களும் மீனவர்களும் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளனர்.
 

 

" திருக்கோவிலில் கடலரிப்பை தடுக்க நடவடிக்கை" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty