வீடுகள் கையளிப்பு
09-03-2017 10:00 AM
Comments - 0       Views - 19

ரஸீன் ரஸ்மின்

வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி திணைக்களத்தின் சமூக சேவைகள் பிரிவினால் திரிய லியட செவனக் திட்டத்தின் கீழ், முந்தல் பிரதேச செயலகத்துக்குட்பட்ட புளிச்சாக்குளம் வளங்கம்மான மற்றும் பெருக்குவற்றான் ஆகிய கிராமங்களில் நிர்மாணிக்கப்பட்ட வீடுகள் இரண்டு, பயனாளிகளிடம் ஒப்படைக்கும்  நிகழ்வு வைபவரீதியாக நேற்று (08) புதன்கிழமை நடைபெற்றது.

முந்தல் திவிநெகும மஹா சங்க முகாமையாளர் எச்.எம்.பி.ரேணுகாவின் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், முந்தல் உதவி பிரதேச செயலாளர் திருமதி எச்.எம்.எம்.மஞ்சலி ஹேரத், முந்தல் பிரதேச அபிவிருத்தி இணைத் தலைவர்களான விக்டர் அன்டனி, எம்.என்.எம்.நஸ்மி, முந்தல் திவிநெகும தலைமையக முகாமையாளர் என்.என்.டிஸ்னி, மங்கள எளிய திவிநெகும வங்கி முகாமையாளர் திருமதி எஸ்.ஏ.ஜே.எஸ்.பெரேரா உட்பட கிராம உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

கடந்த 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் அனுஷ்டிக்கப்பட்ட சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி திணைக்களத்தின் கீழ் உள்ள சமூக சேவைகள் பிரிவினால் திரிய லியட செவனக் திட்டத்தின் கீழ் குறித்த இரு வீடுகளும் தலா 1 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் நிதியொதுக்கீடு செய்யப்பட்டு நிர்மாணித்துக் கொடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு நிர்மாணித்துக் கொடுக்கப்பட்ட குறித்த இரு வீடுகளும் நேற்று 8ஆம் திகதி சர்வதேச மகளிர் தினத்தன்று பயனாளிகளிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டன.

"வீடுகள் கையளிப்பு" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty