அரசாங்கத்துக்கு 1 மாத கால அவகாசம்
11-03-2017 10:51 AM
Comments - 0       Views - 32

எஸ்.நிதர்ஸன்

வலிவடக்கு மக்கள் அரசாங்கத்துக்கு 1 மாத கால அவகாசம் வழங்கியுள்ளனர்.

நேற்று (10) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர்கள் இவ்வாறு, அரசாங்கத்துக்கு கால அவகாசம் வழங்குவதாகத் தெரிவித்தனர்.

"மேலும், பலாலி, காங்கேசன்துறை, தையிட்டி மற்றும் மயிலிட்டி ஆகிய பகுதிகளில் இருந்து கடந்த 27 வருடமாக இடம்பெயர்ந்து, முகாம்கள், உறவினர் வீடுகள், வாடகை வீடுகள் என்பவற்றில் தங்கியுள்ளோம்.

"எமது பகுதிகளை விடுவிக்குமாறு கடந்த காலங்களில் பல கோரிக்கைகளை முன்வைத்தோம். போராட்டங்களை நடத்தினோம். ஆனால் எவ்வித பலனும் இல்லை. எமது போராட்டங்களை தடுப்பதற்காகப் பல வாக்குறுதிகள் வழங்கப்பட்டன.

"ஆனால், எதுவும் நிறைவேற்றப்படவில்லை. வாக்குறுதிகளை நம்பி நாம் ஏமார்ந்ததே தவிர, வேறேதும் இல்லை. எனவே தற்போது, அரசுக்கு 1 மாத கால அவகாசம் வழங்குகின்றோம். எமது இடங்களை 1 மாத காலத்துள் விடுவிக்க வேண்டும். அவ்வாறு விடுவிக்கா விடில் காலவரையறையற்ற தொடர் போராட்டத்தில் ஈடுபடத் தீர்மானித்துள்ளோம்" எனத் தெரிவித்தனர்.

"அரசாங்கத்துக்கு 1 மாத கால அவகாசம்" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty