நடிகை ரம்யா வைத்தியசாலையில்
13-03-2017 10:49 AM
Comments - 0       Views - 117

நடிகையும், அரசியவாதியுமான ரம்யா, உடல்நலக் குறைவு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழில் “குத்து, கிரி, பொல்லாதவன், வாரணம் ஆயிரம், சிங்கம் புலி” போன்ற திரைப்படங்களில் நடித்தவர் ரம்யா என்றழைக்கப்படும் திவ்யா ஸ்பந்தனா.

கன்னடத்திலும் ஏராளமான திரைப்படங்களில் நடித்திருப்பவர், அதன்பின் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து எம்பி.யாகவும் பணியாற்றினார். தற்போது காங்கிரஸ் கட்சியின் அரசியல்வாதியாகவும், சமூக சேவையும் செய்து வருகிறார்.

இந்நிலையில், நடிகை ரம்யாவுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட, பெங்களூரில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் சாப்பிட்ட உணவு, நஞசாக மாறிவிட்டதால் அவருக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இன்னும் ஓரிரு நாளில் இயல்பு நிலைக்கு திரும்புவார் என தெரிகிறது.

"நடிகை ரம்யா வைத்தியசாலையில் " இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty