Princiya Dixci / 2017 மார்ச் 13 , மு.ப. 06:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
தற்போதைய கிரிக்கெட் நிர்வாகத்தில் இணைவதற்கு தாம் தயாரில்லையென, டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சருமான அர்ஜூன ரணதுங்க தெரிவித்தார்.
கிரிக்கெட் நிர்வாகத்தில், அமைச்சர் அர்ஜூன ரணதுங்க இணைந்துக்கொள்ள வேண்டுமென, இலங்கை கிரிக்கெட் சபையின் முகாமையாளர் அசங்க குருசிங்க முன்வைத்த கோரிக்கைக்கு பதிலளிக்கையிலேயே, அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில்,
"கடந்த 20 ஆண்டுகளாக இந்நாட்டில் என்ன நடந்ததென, அசங்க குருசிங்க அறிந்திருக்கவில்லை. எவ்வாறான அரசியல் தலையீடுகள் முன்னெடுக்கப்பட்டன ? எவ்வாறன திருட்டுச் செயல்கள் இடம்பெற்றன? எவ்வாறான தவறிழைத்த நபர்கள் விளையாட்டில் ஈடுப்பட்டார்கள்? என அவர் அறிந்திருக்கவில்லை.
"நிர்வாகத்தில் உள்ளவர்கள் அரசியல் தலையீடுகளை மேற்கொள்கின்றார்கள். அவர்களுடைய நண்பர்களின் பிள்ளைகளிக்கு விளையாட்டில் ஈடுப்படுவதற்கு சந்தர்பம் வழங்குகின்றார்கள். இவ்வாறான நடவடிக்கைகள் காரணமாக, கிரிக்கெட் நிர்வாகத்தின் புகழுக்கு கலங்கம் ஏற்பட்டுள்ளது.
"தற்பொது, பழைய கிரிக்கெட் வீரர்களை உபயோகித்து, தங்களுடைய சேறுகளை மறைக்க முயற்சிக்கும் செயன்முறையொன்று பின்பற்றப்படுகின்றது.
"உலகக் கிண்ணத்தை வென்ற பலர், இன்று கிரிக்கெட் பயிற்றுவிப்பாளர்களாக செயற்பட்டுக்கொண்டிருக்கின்றார்கள். எனவே, எதிர்காலத்தில் எம்மாலும் உலக கிண்ணத்தை வெற்றிகொள்ளலாம். அதன் பொருட்டே இவ்வீரர்கள் வரவழைக்கப்படுகின்றார்கள். இவ்வீரர்களிற்கு உரிய சந்தர்பங்களை வழங்கி வெற்றிபெற வாழ்த்துக்களை தெரிவிக்க வேண்டும்.
"ஜனாதிபதி மற்றும் பிரதமர், துறைமுகத்தை சுத்தம் செய்யுமாறு கோரியே என்னிடம் பொறுப்புக்களைக் கையளித்தார்கள். இன்று நான் அச்செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்கின்றேன். இதற்கமைய, தொழிற்சங்க தலைவர்களெனக் கூறி, திருட்டுச் செயல்களில் ஈடுப்பட்டவர்களை இன்று பதவி நீக்க வேண்டியேற்பட்டுள்ளது. அதேபோல ஹம்பாந்தோட்டை மற்றும் கொழும்பின் கிழக்கு முனையம் ஆகியவற்றை, இந்நாட்டில் அதிகளவு இலாபமீட்டும் நிலைக்குத் தரமுயர்த்த வேண்டும்.
"எனவே, கிரிக்கெட் நிர்வாகத்துக்குள் வருவதற்கு எனக்குப் போதிய நேரமில்லை” என, அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .