ஃபோமின் சிறந்த விற்பனை நிபுணர்களுக்கு கௌரவிப்பு
14-03-2017 08:31 AM
Comments - 0       Views - 10

உள்நாட்டு ஹார்ட்வெயார் மற்றும் ஃபோம் துறையில் 2015/16 காலப்பகுதியில் சிறப்பாக செயலாற்றியிருந்த விற்பனை ஊழியர்களைக் கௌரவிக்கும் நிகழ்வொன்றை ரிச்சர்ட் பீரிஸ் அன்ட் கம்பனி பிஎல்சி அண்மையில் நீர்கொழும்பு, கிரான்டீஸா ஹொட்டலில் ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்வில், ரிச்சர்ட் பீரிஸ் அன்ட் கம்பனி பிஎல்சி பிரதான சபை பணிப்பாளரும் உள்நாட்டு உற்பத்தி மற்றும் விநியோக பிரிவின் முகாமைத்துவப் பணிப்பாளருமான சுனில் லியனகே பிரதம அதிதியாக கலந்து கொண்டார். இந்த விருதுகள் வழங்கும் வைபவம், பங்குபற்றுநர்கள் மத்தியில் கோலாகலமாக நடைபெற்றதுடன், துறையில் சிறப்பாக செயலாற்றியவர்களுக்கு கௌரவிப்பை வழங்கும் வகையிலும் அமைந்திருந்தது.  

விற்பனை செயலணி வெளிப்படுத்தியிருந்த அளப்பரிய சேவை பற்றி சுனில் லியனகே கருத்துத் தெரிவிக்கையில், “எமது விற்பனை செயலணி கொண்டுள்ள அளப்பரிய சேவை மற்றும் கொள்கை அடிப்படையிலான செயற்பாடுகள் போன்றன மாறுபடும் பொருளாதார சூழல்களுக்கமைய மாற்றமடைந்து வருகின்றமை வியக்கத்தக்கது. அவர்களின் ஒன்றிணைந்த செயற்பாடுகள் காரணமாக, எமக்கு சந்தையில் தலைமைத்துவத்தை பேண முடிவதுடன், இலங்கையில் காணப்படும் புகழ்பெற்ற வியாபாரமாகவும் திகழ வழிகோலியுள்ளது” என்றார்.  

மெத்தைகள், தளபாடங்கள், ஃபோம், தளபாடங்கள், மீன்பிடி உபகரணங்கள், பொதுப் பொருட்கள், இறப்பர் பொருட்கள் மற்றும் PVC பொருட்கள் போன்ற பிரிவுகள் வைபவத்தின் முதலாம் கட்டத்தின் போது விருதுகள் வென்றிருந்தன. இந்தப் பிரிவில் சிறந்த வாடிக்கையாளர் சேவை மற்றும் வருமானமீட்டல் போன்றவற்றுக்காக சிறந்த பெறுபேறுகளைப் பதிவு செய்தவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.  

சகல பிரிவுகளிலும் சிறந்த பெறுபேறுகளைப் பதிவு செய்தவர்களை, விற்பனை மற்றும் முகாமைத்துவத் தலைமை அதிகாரிகள், தமது அணி சார்பாக மேற்கொண்டிருந்த முக்கியத்துவம் வாய்ந்த கொள்கைத் தீர்மானங்களுக்காக கௌரவித்திருந்தனர். அதுபோன்று, சிறந்த வாடிக்கையாளர் உறவுகள், விற்பனை வளர்ச்சி, வலய வலையமைப்பு, பொருட்கள் காட்சிப்படுத்தல் மற்றும் கொடுப்பனவுகள் போன்ற பிரிவுகளிலும் சிறந்த சாதனையாளர்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டிருந்தன. வழங்கப்பட்ட பரிசுகளில் வெளிநாட்டு சுற்றுப்பயணங்கள், பணப் பரிசுகள் மற்றும் ஊக்குவிப்புகள் போன்றன அடங்குகின்றன.  

உள்நாட்டு உற்பத்தி மற்றும் விநியோக பிரிவின் தொழிற்சாலை பணிப்பாளர், ஃபோம் பிரிவின் தலைமை அதிகாரியான லலித் விஜேசிங்க இந்த விருதுகள் பற்றி தெரிவிக்கையில், “எமது பரந்தளவு உயர் தரமான தயாரிப்புகளில் மெட்ரஸ் வகைகள், நீர் தாங்கிகள், நீர் பம்பிகள், ரெஜிஃபோம், இறப்பர் பொருட்கள், PVC குழாய்கள், பொருத்திகள் மற்றும் தளபாடங்கள் போன்றன அடங்குகின்றன. இவை உயர் தரங்களைக் கொண்டவை. இவை நுகர்வோருக்கு குழுமம் வழங்கும் உறுதி மொழிக்கமைய அமைந்துள்ளன. நாம் தொடர்ச்சியாக மேற்கொள்ளும் ஆய்வு மற்றும் அபிவிருத்தி செயற்பாடுகளின் தோற்றப்பாடாக இவை அமைந்துள்ளதுடன், தரத்துடன் எப்போதும் உறுதி செய்யும் வகையில் அமைந்துள்ளது” என்றார்.    

"ஃபோமின் சிறந்த விற்பனை நிபுணர்களுக்கு கௌரவிப்பு" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty