சிவாஜிலிங்கத்தின் பிரேரணையை கிழித்தெறிந்தார் தவநாதன்
14-03-2017 01:29 PM
Comments - 0       Views - 42

-எஸ்.நிதர்ஸன்

வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தால், இன்று  (14) இடம்பெற்ற விசேட சபை அமர்வின் போது முன்மொழியப்பட்ட பிரேரணையை, எதிர்க்கட்சி உறுப்பினர் வை.தவநாதன், சபையில் வைத்து கிழித்தெறிந்தார்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், 2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் எனக் கோரிய பிரேரணையை, கடந்த சபை அமர்வின் போது, சிவாஜிலிங்கம் முன்மொழிந்திருந்தார். இப்பிரேரணை, அடுத்த அமர்வில் எடுத்துக்கொள்ளப்படும் என, அப்போது அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இன்று இடம்பெற்ற விசேட அமர்வின் போது, குறித்த பிரேரணையில், 'இலங்கையை சர்வதேச பொறிமுறைக்கு உட்படுத்துமாறு, உறுப்பு நாடுகளைக் கோருதல்' என்ற பதத்தை, பழைய பிரேரணையில் உள்ளடக்கிய சிவாஜிலிங்கம், சபையில் முன்மொழிந்தார்.

இதனையடுத்து, ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள், இப்பிரேரணைக்கு கடும் எதிர்ப்பு வெளியிட்டனர்.

இதன்போது, கடந்த அமர்வில் முன்மொழிந்த பிரேரணை வேறு, இப்பிரேரணை வேறு எனத் தெரிவித்த எதிர்க்கட்சி உறுப்பினர் வை.தவநாதன், சபையை சிவாஜிலிங்கம் அவமதித்ததாகத் தெரிவித்து, அப்பிரேரணையை சபையில் வைத்து கிழித்தெறிந்தார்.

"சிவாஜிலிங்கத்தின் பிரேரணையை கிழித்தெறிந்தார் தவநாதன்" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty