'ஏற்றுக்கொண்ட விடயங்களை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும்'
15-03-2017 05:37 PM
Comments - 0       Views - 37

-பேரின்பராஜா சபேஷ்
 
ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் ஏற்றுக்கொண்ட விடயங்களை இலங்கை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தார்.
 
வாகனேரி கோகுலம் வித்தியாலயத்தின்  வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியின் இறுதிநாள் நிகழ்வு செவ்வாய்கிழமை (14)  நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றியபோது, 'ஜெனீவா மனித  உரிமைகள் பேரவையில் இலங்கை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் என்று  கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை  அரசாங்கம் முழுமையாக நிறைவேற்றவில்லை.
 
இலங்கை அரசாங்கத்தின் இணை அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நிறைவேற்ற இறுக்கமான நிபந்தனையுடன் கண்டிப்பான உத்தரவை மனித உரிமைப் பேரவை பிறப்பித்துள்ளது. கால அவகாசம் கேட்பது இலங்கை அரசாங்கம். கொடுப்பது மனித உரிமைப் பேரவை' என்றார்.

'மேலும், கால அவகாசம் கொடுக்கக்கூடாது, கால அவகாசம் கொடுக்க வேண்டும் என விடயத்தில் முரணான செய்திகளை வெளியிட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பிரித்தாளும் தந்திரோபாயங்களும்  சில ஊடகங்களால் மேற்கொள்ளப்படுகின்றன. இது தொடர்பில்  நாங்கள் கவனமாக இருக்க வேண்டும்' என்றார்.

 

"'ஏற்றுக்கொண்ட விடயங்களை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும்'" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty