சாத்வீக போராட்டத்துக்கு நீதிமன்றம் அனுமதி
16-03-2017 03:35 PM
Comments - 0       Views - 119

-சண்முகம் தவசீலன்

வீதி போக்குவரத்துக்கு மற்றும் இராணுவத்தினர் செயற்பாடுகளுக்கு  இடையூறு இன்றி சாத்வீக போராட்டத்தில் ஈடுபட  முல்லைத்தீவு  நீதிமன்ற நீதவான் எஸ் எம் எஸ் சம்சுதீன்  உத்தரவு  பிறப்பித்துள்ளார்.

முல்லைத்தீவு – கேப்பாப்புலவு இராணுவ முகாமுக்கு முன்பாக நிலமீட்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களிடம் இன்றைய தினம் கருத்து கோரவிருப்பதாக முல்லைத்தீவு நீதிமன்றம், நேற்று அறிவித்திருந்தது. இதற்கமைய போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களில் சிலர் இன்று ஆஜரானார்கள்.

வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது,  இருதரப்பினரதும் சாட்சிகள், கருத்துகள், ஆவணங்கள் ஆகியவற்றை பரிசீலித்த நீதவான், இடையூறு இன்றி சாத்வீக போராட்டத்தில் ஈடுபட அனுமதியளித்ததுடன், இந்த உத்தரவு 14 நாட்களுக்கு நடைமுறையில் இருக்கும் என தெரிவித்தார்.

"சாத்வீக போராட்டத்துக்கு நீதிமன்றம் அனுமதி" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty