சட்டவிரோத மீன்பிடி வலைகள் பறிமுதல்
18-03-2017 02:42 PM
Comments - 0       Views - 56

நல்லதம்பி நித்தியானந்தன்

ஏறாவூர், முறக்கொட்டான்சேனை வாவியில் சட்டவிரோத வலைகளைப் பயன்படுத்தி, மீன்பிடித்தொழில் ஈடுபட்ட ஆறு மீனவர்களின் வலைகள் மற்றும் மீன்பிடி உபகரணங்கள், இன்று (18) அதிகாலை கைப்பற்றப்பட்டதாக, ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

முறக்கொட்டான்சேனை ஆற்றில் கடந்த சில காலங்களாக சட்டவிரோத தங்கூசி வலை, டிஸ்கோ வலை மற்றும் முட்டு வலை போன்ற வலைகளைப் பயன்படுத்தி, பலர் மீன்பிடியில் ஈடுபட்டுவருவதை அறிந்துகொண்ட முறக்கொட்டான்சேனை மீனவர் சங்கம், ஏறாவூர் பொலிஸாருக்குத் தெரியப்படுத்தியதையடுத்து, பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, சுமார் 30,000 ரூபாய் பெறுமதியுடைய குறித்த வலைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

விசாரணை குறிப்பு எழுதியததையடுத்து, சட்டவிரோத வலைகளுடன் பிடிக்கப்பட்ட 6 மீனவர்கள் மற்றும் மீன்பிடி தோனிகள், பொலிஸாரினால் விடுவிக்கப்பட்டதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த முறக்கொட்டான்சேனை வாவியில் சுமார் 100க்கு மேற்ப்பட்ட வீச்சு வலை மூலம் அன்றாடம் மீன்பிடித் தொழில் ஈடுபடும் மீனவர்கள், தங்களின் தொழிலை மேற்கொண்டு வரும்வேளையில் இவ்வாறான சட்டவிரோத மீன்பிடி வலைகளைப் பயன்படுத்தி மீன்கள் பிடிப்பதினால,; வாவியிலுள்ள மீன் இனம் அழிவடைவதாகவும், இதனால் ஏனைய மீனவர்கள் தொழில் இன்றி பாதிப்படையவதாகவும் முறக்கொட்டான்சேனை மீனவர் சங்கத் தலைவர் முருகுப்பிள்ளை மயில்வாகனம் தெரிவித்தார்.

"சட்டவிரோத மீன்பிடி வலைகள் பறிமுதல்" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty