மழையால் விவசாயிகள் அவதி
19-03-2017 04:51 PM
Comments - 0       Views - 7

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

சில நாட்களாக பெய்து வரும் அடைமழை காரணமாக, விளைந்த நெல்லை அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக காலபோக செய்கைகளில் ஈடுபட்ட விவசாயிகள் விளைந்து அறுவடைக்கு தயாரான நிலையில் உள்ள நெல்லை அறுவடை செய்ய முடியாத நிலையில் உள்ளனர்.

கடந்த டிசெம்பர், ஜனவரி, பெப்ரவரி மாதங்களில் நிலவிய கடும் வரட்சியால் பல்வேறு பாதிப்புக்களை எதிர்கொண்ட விவசாயிகள், ஓரளவு நீர் இறைக்கும் இயந்திரங்கள் மூலம் நீர் இறைத்தும் குளத்து நீரை சிக்கனமாக பயன்படுத்தியும் தமது பயிர்களை பாதுகாத்த விவசாயிகள் தற்போது தமது பயிர்செய்கைகளை அறுவடை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது அடிக்கடி பெய்துவரும் மழை காரணமாக விவசாயிகள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

"மழையால் விவசாயிகள் அவதி" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty