2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

'அழிவிலிருந்து மீண்ட மக்களுக்கு வலுவான நம்பிக்கை அவசியம்'

George   / 2017 மார்ச் 20 , மு.ப. 10:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

“பாரிய அழிவிலிருந்தும், வன்முறையிலிருந்தும் மீண்டுள்ள மக்களிடம், நம்பிக்கை மிக வலுவாக இருக்கவேண்டும்” என, தெரிவித்த ரொறான்ரோ மாநகர மேயர் ஜோன் ரொறி, “மீள்குடியேற்றம் காணாமல்போனவர்கள் விடயம், மீன்பிடி பிரச்சினைகள் தீர்க்கப்படுகின்றபோது அந்த நம்பிக்கை நிச்சயமாக கட்டியெழுப்படும்“ எனக் கூறினார்.

முல்லைத்தீவு மாவட்டத்துக்கு ஞாயிற்றுக்கிழமை (20) விஜயம் மேற்கொண்ட அவர், முள்ளியவளை கலைமகள் வித்தியாலயத்தில், மாவட்டத்திலுள்ள மக்கள் அமைப்புக்களை சந்தித்து கலந்துரையாடியபோது, இதனைக் கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,  “புலம்பெயர்ந்த தமிழ் மக்கள், கனடா நாட்டில் எம்மை விடவும் கஷ்டப்பட்டு உழைத்து, எமக்கு உதாரணமாக திகழ்கின்றார்கள். நீங்கள் பாரிய அழிவுகளாலும், வன்முறைகளாலும் பாதிக்கப்பட்டுள்ளீர்கள்.

இங்கே வந்து, மக்களுடைய பிரச்சினைகளை நேரடியாகவே நான் பார்த்திருக்கின்றேன். அவர்களுடைய பிரச்சினைகளை கேட்டிருக்கின்றேன். நான் கனடா சென்றதும் அங்குள்ளவர்களுடன் இந்தப் பிரச்சினைகள் மற்றும் அவற்றுக்கான தீர்வுகள் தொடர்பில் பேசுவேன். மேலும், கல்வி துறையில் உள்ள தேவைகள் மற்றும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை நாங்கள் நிச்சயம் எடுப்போம்” என்றார்  

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .