‘கழிவை கொட்டினால் நடவடிக்கை’
20-03-2017 03:37 PM
Comments - 0       Views - 74

சட்டவிரோதமான முறையில் குப்பைகளை போடுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை  முன்னெடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்த மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைசல் முஸ்தப்பா, இது குறித்து பொலிஸாருக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இது குறித்து மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,

சூழலை பாதுகாப்பாகவும் தூய்மையாகவும் வைத்திருப்பது அனைவரினதும் கடமையாகும். அந்த கடமையை உதாசீனப்படுத்துவது சமூகத்துக்கு செய்யும் ஒரு துரோகமாகவே கருதப்படும். இதற்கு எதிராக சட்ட நடவடிக்கை அமுல்படுத்தப்படுவது காலத்தின் தேவையாகும்.

முறையான வகையில் க​ழிவுளை வெளியேற்றாமல் இருப்பதனால் பாரிய பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேரிடுகின்றது. தற்போது இது ஒரு சமூக பிரச்சினையாக உருவெடுத்துவிட்டது.

அதனால், முறையான வகையில் குப்பைகளை அகற்றாதவர்களை இனங்கண்டு, பாரபட்சமின்றி அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது குறித்து  பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

"‘கழிவை கொட்டினால் நடவடிக்கை’" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty