2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

Alpha Festival 2017 நிகழ்வில் SONY தயாரிப்புகள்

Gavitha   / 2017 மார்ச் 20 , மு.ப. 11:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

பத்தரமுல்லை, வோட்டர்ஸ் எட்ஜில் நடைபெற்ற Alpha Festival நிகழ்வில், பல்வேறு வகையான, புத்தாக்கம்மிக்க டிஜிட்டல் விம்பவாக்க உற்பத்திகளை Sony Electronics நிறுவனம் காட்சிப்படுத்தியிருந்தது. புகைப்படவியலாளர்கள் மற்றும் வீடியோ எடுப்பவர்கள் தாம் வசப்படுத்தும் காட்சிகளுக்கு உயிரோட்டத்தை ஏற்படுத்த அவர்களுக்கு இடமளிக்கின்ற, நவீன படைப்பாக்கத்திறன் கொண்ட கருவிகளை கண்டறியும் வாய்ப்பினை இந்நிகழ்வு அவர்களுக்கு வழங்கியுள்ளது. மிகவும் பிரபலமான, ஆடியற்ற கமராக்களான Alpha 6500 மற்றும் Alpha7 ஆகிய Sony இன் நவீன உற்பத்தி வரிசைகள் நிகழ்வில் அறிமுகப்படுத்தப்பட்டமை முக்கியமான ஒரு அம்சமாகும். புத்தம்புதிய Semi-Telephoto G-Master SEL1000F28GM வில்லைகளும் இந்நிகழ்வில் காட்சிப்படுத்தப்பட்டன.  

இலங்கையில் Sony உற்பத்திகளின் உத்தியோகபூர்வ விநியோகத்தர்களான CameraLK இந்நிகழ்வின் இணை ஏற்பாட்டாளராகச் செயற்பட்டுள்ளது. புதிய Sony Alpha 6500 மற்றும் Alpha 7 உற்பத்தி வரிசைகளை சோதித்துப் பார்க்கும் வாய்ப்பினை புகைப்படவியல் ஆர்வலர்களுக்கு வழங்கும் வகையில், மாதிரிகள் பொம்மை புகைப்படச் சாவடிகள் அடங்கலாக நேரடி சாவடிகள் இடம்பெற்றமை நிகழ்வின் சிறப்பம்சமாகும். Sony Alpha வர்த்தகநாம தூதுவர்களான குஷாந்த ஹேவபத்திரண மற்றும் திமித்ரி குரூஸ் மற்றும் ஹென்றி ராஜகருண, ஷாந்த குணரட்ன, மீஷா குணவர்த்தன மற்றும் அனுஷ்கா எரங்க ஆகிய நான்கு தொழில்சார் புகைப்படவியலாளர்களும், CameraLK உடன் இணைந்து பயிலரங்குகளை ஏற்பாடு செய்திருந்தமை நிகழ்வின் மற்றுமொரு முக்கிய அம்சமாகும்.  

Sonyஇன் இலங்கை பிரதிநிதித்துவ அலுவலகத்தின் தலைமை அதிகாரியான அலெக்ஸ் யீ அவர்கள் நிகழ்வில் உரையாற்றுகையில், “இலங்கையிலுள்ள அனைத்து புகைப்படவியலாளர்கள் மற்றும் வீடியோ எடுக்கும் ஆர்வலர்களுக்கு இது தனித்துவமான ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது. இந்நிகழ்வானது, புகைப்படவியலாளர்களுக்கு Sony இன் நவீன, ஆடியற்ற புகைப்பட்ட தொழில்நுட்பத்தை அனுபவிக்கும் வாய்ப்பை வழங்கியது மட்டுமன்றி, தமது திறமைகளை மேம்படுத்தும் வகையில், பயிலரங்குகள் மூலமாக தொழில்நுட்பங்களைக் கற்று, அறிவைப் பகர்ந்து கொள்ளும் அமர்வுகளில் பங்குபற்றவும் வாய்ப்பளித்துள்ளது”, என்று குறிப்பிட்டார். “நாட்டில் புகைப்படவியல் துறை சார்ந்த சமூகத்தின் அபிலாஷகளைக் கட்டியெழுப்பும் அதேசமயம், நவீன தொழில்நுட்பம் மற்றும் நிபுணத்துவத்தை இலங்கைக்கு வழங்குவதில் நாம் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் உள்ளோம்” என்றார்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .