மக்களின் நலனுக்காக “பல்வேறு நலத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும்”
20-03-2017 05:09 PM
Comments - 0       Views - 19

பெருந்தோட்ட மக்கள், அன்றாடம் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர். அவர்களின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றும் வகையில் பல்வேறு வேலைத்திட்டங்களை எனது அமைச்சின் மூலம் முன்னெடுத்து வருகின்றேன' என, ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.

ஹப்புத்தளை, றொஹேம்டன் தோட்டப் பாதை, ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமானின் நிதியொதுக்கட்டின் கீழ் புனரமைக்கப்பட்டு, மக்களின் பாவனைக்காக, நேற்று   கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

இங்கு மேலும் கூறிய அவர், 'பெருந்தோட்டப் பாதைகள் மிகவும் மோசமான நிலையில் காணப்படுவதனால், தோட்ட மக்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர்.

அதனை கவனத்திற் கொண்டே, இப்பிரச்சினையை தீர்க்கும் வகையில் முதற் கட்டமாக தோட்டப்புற பாதைகளை புனர்நிர்மானம் செய்யும் வேலைத்திட்டத்தை மேற்கொண்டு வருகின்றேன். இன்னும் பல பாதைகள், எனது நிதியொதுக்கீட்டின் கீழ் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன' என்று அவர் மேலும் கூறினார்.

"மக்களின் நலனுக்காக “பல்வேறு நலத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும்”" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty