தொழிலாளர்கள் பணிப்பகிஷ்கரிப்பு
20-03-2017 05:29 PM
Comments - 0       Views - 10

எம்.செல்வராஜா

தோட்ட நிர்வாகத்தின் எதேச்சதிகாரத்தைக் கண்டித்து, பதுளை கின்ரோஸ் பெருந்தோட்டத் தொழிலாளர்கள், இன்று முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேற்படித் தோட்டம், மல்வத்த வெலிபிளான்டேசனின் பொறுப்பின் கீழ் இயங்கி வருகின்றது. புதிய சம்பள முறைமைக்கு அமைவாக தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்காமை மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்காமை போன்ற பல்வேறு பிரச்சினைகளை, இத் தோட்ட மக்கள் எதிர்கொண்டு வருகின்றனர்.

இவ்விடயங்கள் தொடர்பில் தோட்டத் தலைவர்கள், தோட்ட நிர்வாகத்துடன் பேசுவதற்கு முற்பட்டால், தோட்ட நிர்வாகம் அதற்கு உடன்படாது, கடுந்தொனியில் சாடுவதாக, பாதிக்கப்பட்டத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே இதனைக் கண்டித்தும், தமது பிரச்சினைக்கு தோட்ட நிர்வாகம் தீர்வை பெற்றுத்தர வேண்டுமெனக் கோரியுமே, மேற்படி மக்கள் நேற்று முதல் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், மேற்படி மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கான கூட்டமொன்று, பதுளை உதவித் தொழில் ஆணையாளர் அலுவலகத்தில், இன்று நடைபெறவுள்ளது.

இப் பேச்சுவார்தையில், தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வுக் கிடைக்காவிட்டால், தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்திவல் ஈடுபடவுள்ளதாக தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

" தொழிலாளர்கள் பணிப்பகிஷ்கரிப்பு" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty