கிழக்குப் பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகம் மூடப்பட்டது
21-03-2017 10:22 AM
Comments - 0       Views - 52

-பொன் ஆனந்தம்

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தில்   திங்கட்கிழமை (20) இடம்பெற்ற குழப்ப நிலையை அடுத்து,  அவ்வளாகம் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளது என  அவ்வளாக முதல்வர் வி.கனகசிங்கம் தெரிவித்தார்.

இந்நிலையில், விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்களையும் வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார்.

கடந்த 28ஆம் திகதி மாலை 4 மணி முதல் சுமார் 6 மணித்தியாலங்களாக மேற்படி  வளாகத்தில்  விரிவுரையாளர்களையும் நிர்வாக உத்தியோகத்தர்களையும் தடுத்து வைத்தார்கள் என்று இனங்காணப்பட்ட  16 மாணவர்களுக்கு வகுப்புத்தடையை  அப்பல்கலைக்கழக நிர்வாகம் விதித்துள்ளது.   

இவ்வாறு வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ள மாணவர்களையும் பரீட்சையில் தோற்றுவதற்கு அனுமதி வழங்குமாறு கோரி அவ்வளாக மாணவர்கள் திங்கட்கிழமை எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.   மேற்படி வளாகத்தில் திங்கட்கிழமை முதல் பரீட்சை நடைபெறவிருந்தது.

பரீட்சைக்குத் தோற்றவிருந்த மாணவர்கள் சிலருக்கு இடையூறு விளைவிக்கப்பட்டதுடன்,  இக்குழப்ப நிலைமையின்போது காவலாளி ஒருவரும் மாணவர் ஒருவரும் காயமடைந்துள்ளனர்.

இந்த மாணவர்களின் எதிர்ப்பு நடவடிக்கையை அடுத்து, மறு அறிவித்தல்வரை பரீட்சையும் ஒத்திவைக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

 

" கிழக்குப் பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகம் மூடப்பட்டது" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty